புளியங்குடியில் சிவாஜி பிறந்தநாள்

புளியங்குடி, அக். 2:  புளியங்குடியில் நகர சிவாஜி சமூகநலப் பேரவை சார்பில் சிவாஜி கணேசன் 92வது பிறந்த நாள் கொண்டட்பட்டது.விழாவிற்கு தலைவர் பாண்டிச்சேரி சுப்பையா தலைமை வகித்தார். முன்னாள் கவுன்சிலர் தர்மமணி, நடராஜன், பிச்சையா, மகாலிங்கம் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக புளியங்குடி நகர காங்கிரஸ் தலைவர் பால்ராஜ், திமுக நகர செயலாளர் செல்வகுமார், மதிமுக பொதுக்குழு உறுப்பினர் அலாவுதீன், வரி செலுத்துவோர் நலச்சங்க தலைவர் அருணாசலம் பேசினர். விழாவில் 92 ஏழைகளுக்கு இலவச வேட்டி சேலை, சிறுவர்களுக்கு சட்டை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ரத்தினம் நாடார், பாலசுப்ரமணியன், ராஜா மற்றும் இளைஞர் காங்கிரஸ் முருகன், செல்வம் மற்றும் சிவாஜி சமூகநலப்பேரவை பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: