திருவிடைமருதூரில் அறுவடை பின்சார் மேலாண்மை மதிப்பு கூட்டல் பயிற்சி வகுப்பு மகளிர் குழுவினர் பங்கேற்பு

கும்பகோணம், அக். 2: கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் வட்டாரம் வேளாண்மைத்துறை அட்மா திட்டத்தின்கீழ் சாத்தனூரில் அம்மா பண்ணை மகளிர் குழுக்களுக்கு அறுவடை பின்சார் மேலாண்மை மற்றும் மதிப்புக்கூட்டல் பயிற்சி நடந்தது.

வேளாண் உதவி இயக்குனர் ரவிச்சந்திரன் தலைமை வகித்து தொழில்நுட்ப கருத்துகள் குறித்து விளக்கம் அளித்தார். நுண்ணீர் பாசனம் மற்றும் பிரதம மந்திரி ஓய்வூதிய திட்ட தொழில்நுட்பம் குறித்து வேளாண்மை அலுவலா் செல்வராணி பேசினார். உற்பத்தி செய்யக்கூடிய விளைப்பொருட்களை சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்யும் தொழில்நுட்பம் குறித்து தஞ்சை வேளாண் வணிகவியல் துறையை சேர்ந்த வேளாண் அலுவலர் பிரதீப் பேசினார்.வட்டார தொழில்நுட்ப மேலாளா் ராஜாத்தி பேசுகையில், சில நாட்கள் கெடாமல் இருக்கும் அப்பளம், ஊறுகாய் போன்ற உணவுவகை பொருட்கள் தயாரித்து அதிக லாபம் ஈட்டலாம். மேலும் இட்லி பொடி மற்றும் பருப்பு பொடி போன்றவற்றை குறைவாக தயாரித்து வியாபாரம் செய்வதால் முதலீடுக்கு இழப்பு இல்லாமல் பராமரிக்க இயலும் என்றார். உதவி வேளாண் வணிக அலுவலா் பாலமுருகன் நன்றி கூறினார்.

Related Stories: