டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

பேராவூரணி, அக். 2: பேராவூரணியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை, தேர்வு நிலை பேரூராட்சி சார்பில் டெங்கு காய்ச்சல் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் சவுந்தரராஜன் தலைமை வகித்தார். பேராவூரணி தாசில்தார் ஜெயலட்சுமி, பேராவூரணி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பாஸ்கர் முன்னிலை வகித்தனர். பேரணியை எம்எல்ஏ கோவிந்தராசு துவக்கி வைத்தார்.ரயில் நிலையம் அருகே துவங்கிய பேரணி முக்கிய வீதிகளின் வழியாக சென்று தாசில்தார் அலுவலகம் அருகே நிறைவடைந்தது. இதையொட்டி டெங்கு புழு குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. மேலும் 500 பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. பேரணியில் நகர வர்த்தகர் கழக தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் ஜகுபர்அலி, பேரூராட்சி செயல் அலுவலர் மணிமொழியன், வருவாய் ஆய்வாளர் அஷ்ரப் அலி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: