ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு விளக்க கூட்டம்

மதுரை, அக். 1: மதுரை ஒத்தக்கடையில் உள்ள கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு, போஷன் அபியான் விளக்கக்கூட்டம் ஆசிரியை  மல்லிகா (தலைமையாசிரியர் பொறுப்பு) தலைமையில் நடந்தது.

  ஆசிரியை மெர்சி முன்னிலை வகித்தார். ஒத்தக்கடை கிராம சுகாதார நிலைய செவிலியர்  மீனா, டெங்கு நோய்க்கு காரணமான ஏடிஸ் கொசு பற்றியும், அது உருவாகும் இடங்கள் பற்றியும், நம்முடைய சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக்கொள்வதன் அவசியம் பற்றியும், நோய் ஏற்படாமல் எவ்வாறு தங்களை காத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றியும் விளக்கி கூறினார். கூட்டத்தில், காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. அங்கன்வாடி பொறுப்பாளர் பைரோஜா, பிரதமரின் போஷன் அபியான் திட்டம் பற்றியும், குழந்தைகளும், மாணவர்களும் நல்ல சத்தான ஊட்டமிக்க உணவு உண்ண வேண்டியதின் அவசியம் பற்றியும், கை கழுவும் முறைகள் பற்றியும்  செயல்முறை விளக்கம் அளித்தார். ஆசிரியை சாந்தா நன்றி கூறினார்.

Related Stories: