உத்தமபாளையத்தில் இன்று மின்தடை

உத்தமபாளையம், செப்.30: உத்தமபாளையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று(செப்.30) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.உத்தமபாளையம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் இன்று காலை 9.45 மணி முதல் மாலை 4.45 மணிவரை உத்தமபாளையம், உ.அம்பாசமுத்திரம், கோகிலாபுரம், ஆனைமலையன்பட்டி, அனுமந்தன்பட்டி, கோம்பை, பண்ணைப்புரம், ராயப்பன்பட்டி உள்ளிட்ட ஊர்களுக்கு மின்சார விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: