டிஆர்பி தேர்வர்களுக்கு 12 இடங்களில் பயிற்சி ஆன்லைன் வழியாக

கிருஷ்ணகிரி, செப்.26: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வரும் 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெறும் முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை-1க்கு நேரடி நியமன ஆன்லைன் போட்டி எழுத்துத் தேர்வு எழுத கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் நடைபெறும் தேர்வு என்பதால் தேர்வர்களுக்கு இணையவழி தேர்வு பயிற்சி அளிக்க கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வட்டார அளவில் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பயிற்சி மையங்களில் இன்று (26ம்தேதி) பயிற்சி பெற விரும்புவோர் மையம் அமைக்கப்பட்டுள்ள பள்ளிகளில் தலைமை ஆசிரியரை அணுகி இணையவழி தேர்வு பயிற்சி பெறலாம். அதன்படி, கிருஷ்ணகிரி அரசு ஆண்கள், மகளிர் மேல்நிலைப்பள்ளிகள், ஓசூர் அரசு ஆண்கள், மகளிர் மேல்நிலைப்பள்ளிகள், ஊத்தங்கரை அரசு ஆண்கள், மகளிர் மேல்நிலைப்பள்ளிகள், காவேரிப்பட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, மத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, தேன்கனிக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தளி அரசு மேல்நிலைப்பள்ளி, கெலமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி என 12 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

எனவே, விருப்பமுள்ளவர்கள் இந்த மையங்களுக்கு சென்று பயிற்சி பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: