மாநகர சாலைகளை சீரமைக்க கோரி மனு

திருச்சி, செப்.26:  மாநகர சாலைகளை சீரமைக்க கோரி மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டது. ஜனநாயக மக்கள் எழுச்சி கழக பொதுச்செயலாளர் ஷாஜகான் தலைமையில் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் வேகத்தடை இல்லை. இருக்கும் வேகத்தடைகளில் வெள்ளை குறியீடு கோடுகள் இல்லை. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.

எனவே விபத்தை தடுக்க வேகத்தடைகளும், வேகத்தடைகளில் உரிய வெள்ளை குறியீடு (ஜிப்ரா லைன்) கோடுகள் அமைக்க வேண்டும். கலைஞர் அறிவாலயம், சாஸ்திரி நகர், தில்லைநகர், நீதிமன்ற பிரதான சாலை உள்பட முக்கிய பகுதிகளில் உள்ள சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும் பள்ளி செல்லும் மாணவ, மணவியரும் அவதியடைகின்றனர். பாதாள சாக்கடை மேல் மூடி உடைந்து கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு பல தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதை சீரமைத்து பொதுமக்களுக்கு சுகாதாரத்தை ஏற்படுத்தி தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது. இதில் மாநில செயலாளர் அயூப்கான், மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Stories: