தென்காசியில் மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு பேரணி

தென்காசி, செப். 25: தென்காசியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் மவுண்ட் ரோடு இளைஞரணி சார்பில் காட்டுபாவா பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற மழைநீர் சேமிப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. தென்காசி மவுண்ட் ரோடு ஆட்டோ நிறுத்தம் முன்பு நடந்த பேரணி துவக்க நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் பிரேம்ஆனந்த் தலைமை வகித்தார். நகராட்சி பொறியாளர் ஹசீனா, சுகாதார ஆய்வாளர் மாரிமுத்து, நகரமைப்பு ஆய்வாளர் ஷேக்முகமது முன்னிலை வகித்தனர். முன்னாள் கவுன்சிலர் முகமது மைதீன் என்ற ராசப்பா வரவேற்றார். நகராட்சி ஆணையாளர் பிரேம்ஆனந்த் பேரணியை துவக்கி வைத்தும், பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கியும் பேசினார். முன்னதாக காட்டுபாவா உயர்நிலைப்பள்ளி 6ம் வகுப்பு மாணவி ஷிப்ரா, 9ம் வகுப்பு மாணவன் ஜமால்அர்ஸ் ஆகியோர் மழைநீரின் சேமிப்பு குறித்து பேசினர்.

இந்திய தேசிய லீக் கட்சி மாவட்டத் தலைவர் சுலைமான்சேட், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைவர் செய்யது அலி, முஸ்தபா, கலைமான், ஒலி, தமுமுக நியாஸ், வாப்பாசேட் மற்றும் காட்டுபாவா பள்ளி அனைத்து ஆசிரிய, ஆசிரியைகளும் பங்கேற்றனர். பேரணி மவுண்ட் ரோடு ஆட்டோ ஸ்டாண்டில் துவங்கி தவளபுரம், கொடிமரம், வடக்கு மவுண்ட் ரோடு வழியாக சென்றது. இதில் மாணவ மாணவிகள் மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக வந்தனர். ராசப்பா நன்றி கூறினார்.

Related Stories: