திருத்துறைப்பூண்டி அரசு பள்ளி என்எஸ்எஸ் முகாம் 50 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கல்

திருத்துறைப்பூண்டி, செப்.25: திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்டத்தின் 7 நாள் சிறப்பு முகாம் ஆதிரங்கம் ஊராட்சி ஒன்றியநடுநிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கியது. தலைமையாசிரியர் திருமாறன் தலைமைவகித்தார், பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் மாரிமுத்து, உதவிதலைமையாசிரியர் சுப்பிரமணியன் முன்னிலைவகித்தனர்.திட்ட அலுவலர் சக்கரபாணிவரவேற்றார்.ஊராட்சி மன்ற முன்னாள்தலைவர் முகமது உசேன் முகாமினை துவக்கி வைத்து பேசினார். முகாமின் முதல் நிகழ்வாகபள்ளி வளாக தூய்மைப்பணி மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டது. மேலும் நாட்டு நலப்பணித் திட்டத்தின் ஐம்பதாவது ஆண்டினை குறிக்கும் வகையில் 50 பேருக்கு தென்னை மரக்கன்றுகள்வழங்கப்பட்டது. மாலை யோகாவும் மனித வாழ்வும் மற்றும் ஜல்சக்திஅபியான் நீர் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு என்னும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு ஜேசிஸ்சங்கதலைவர் மணிவண்ணன் தலைமைவகித்தார். மனவளக்கலைமன்ற பேராசிரியர் வெங்கட்ராமன் பேசினார்.

Related Stories: