நல்லாசிரியருக்கு பாராட்டு விழா

நெல்லை, செப். 24: பாவூர்சத்திரம் ரோட்டரி கிளப் சார்பில் நல்லாசிரியர் சங்கர் சீனிவாசனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தலைவர் இசக்கிமுத்து தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக அம்பை கலைக்கல்லூரி முதல்வர் சுடலையாண்டி கலந்து கொண்டு நல்லாசிரியர் சங்கர் சீனிவாசனை பாராட்டி  கேடயம் வழங்கினார். முன்னாள் ரோட்டரி துணை ஆளுநர் சந்தானம் வாழ்த்தி பேசினார். ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது. செயலர் மோகன் நன்றி கூறினார்.

Related Stories: