கடையம் அருகே சாலையில் பழுதாகி நின்ற அரசு பஸ்

கடையம், செப். 20:  கடையம் அருகே ஆக்சில் கட்டானதால் சாலையில் திடீரென நின்ற அரசு பஸ்சால் பயணிகள் அவதிப்பட்டனர். செங்கோட்டை  பணிமனையைச் சேர்ந்த அரசு பஸ் நேற்று நண்பகல் 12.30 மணிக்கு 25 பயணிகளுடன் தென்காசியில் இருந்து அம்பைக்கு புறப்பட்டது. கடையம் அடுத்த மாதாபுரம் பகுதிக்கு 12.45 மணிக்கு வந்தபோது  பஸ்சின் ஆக்சில் கட்டாகி பலத்த சத்தத்துடன் கம்பியுடன் தார்சாலையில்  விழுந்தது. இதையடுத்து பஸ்சின் இயக்கம் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் அவதிப்பட்ட பயணிகள், பின்னர் வேறு பஸ்சில் ஏற்றி அனுப்பிவைக்கப்பட்டனர். மேலும் நடுவழியில் பழுதாகி நின்ற பஸ்சால், மற்ற வாகனங்கள் அவ்வழியாகச் செல்வதில் தடங்கல் ஏற்பட்டது. பின்னர் வந்த பணியாளர்கள் பஸ்சில் ஏற்பட்ட பழுதை சரிசெய்தனர். அதன்பிறகே போக்குவரத்து சீரானது.

Advertising
Advertising

Related Stories: