ஐஓசி., சிறப்பு அறிவிப்பு 50 லி., டீசல் நிரப்பினால் பரிசாக மினி டிரக்

சேலம், செப்.11: ஐஓசி மற்றும் டாடா நிறுவனம் இணைந்து 50 லிட்டர் டீசல் நிரப்பும் வாகனம் உரிமையாளர்களுக்கு டாடா அல்ட்ரா, டாடா ஏசிஇ கோல்டு வாகனங்கள் பரிசாக வழங்குகிறது. இதற்கான தொடக்க விழா கந்தம்பட்டியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் பெட்ரோல் வங்கியில் நடந்தது. விழாவுக்கு சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சென்னகேசவன் தலைமை வகித்தார். இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் சேலம் முதன்மை விற்பனை மேலாளர் சிவக்குமார், முதுநிலை மேலாளர் அப்பாண்டீராஜன், சரத்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் முதுநிலை மேலாளர் அப்பண்டிராஜன் கூறியதாவது:  டீசல் விற்பனையை ஊக்குவிப்பதற்காக, இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அனைத்து சில்லரை விற்பனை நிலையங்களிலும் எஸ்எம்ஸ் அடிப்படையிலான விற்பனை பிரசாரத்தை நடத்தி வருகிறோம். பிரசார காலம் நேற்று (10ம்தேதி) முதல் டிசம்பர் 8ம் தேதி வரையாகும். ஒரு முறை 50 லிட்டர் அல்லது அதற்கு மேல் டீசல் நிரப்ப வேண்டும். பிறகு 99114-10000 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். ஒரு மொபைலில் இருந்து 2 முறை மட்டுமே ஒரு நாளுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். இரண்டு நாளுக்கு ஒரு முறை, ஒரு டாடா ஏசிஇ கோல்டு (மினி டிரக்) பரிசாக கிடைக்கும். மேலும் மாதம் ஒருமுறை ஒரு டாடா அல்ட்ரா (எம்சிவி) பரிசாக கிடைக்கும். மொத்தில் 45 டாடா ஏசிஇ கோல்டு, 3 டாடா அல்ட்ரா கிடைக்கும். 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்ட்ரா பவர் மூலம் ₹1000 மதிப்புள்ள இலவச டீசல், பிரிண்டட் பில் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும். பரிசு வெல்வதற்கு அசல் பில் அவசியமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertising
Advertising

Related Stories: