காங்கயம் அருகே ஆற்று பாலத்தை ஆக்கிரமிக்கும் புதர்கள்

காங்கயம், செப். 10: நத்தக்காடையூர் அருகே உள்ள மருதுறை நொய்யல் ஆற்று பாலம் பகுதியில் முள் செடிகள், புதர்கள் ரோட்டை ஆக்கிரமித்து வருகிறது. நத்தக்காடையூர் அருகே உள்ள மருதுறை நொய்யல் ஆற்று பாலம் சாலை வழியாக பள்ளி வாகனம், பஸ், இரு சக்கர வாகன போக்குவரத்து அதிக உள்ளது. இப்பகுதியில் இருந்து ஈரோடு, அரச்சலூர், சென்னிமலை போன்ற பகுதிக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் விலகி செல்லும் போது முட்கள் மற்றும் புதர்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மருதுறை ஊராட்சி நிர்வாகம் புதர்களை அகற்ற நடவடிக்கை  எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: