பைக் விபத்தில் வாலிபர் சாவு

நெல்லை, ஆக. 22:  நெல்லை  அருகே குப்பக்குறிச்சியைச் சேர்ந்தவர் முத்துசெல்வம் (24).   கங்கைகொண்டானில் உள்ள டயர் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.  சம்பவத்தன்று இவர் பணி முடிந்து தனது பைக்கில் இரவு வீட்டுக்கு  திரும்பினார். அப்போது பைக் திடீரென நிலை தடுமாறி சாலையோரத்தில் உள்ள ஒரு  கம்பத்தில் மோதி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு  நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனினறி பரிதாபமாக நேற்று  இறந்தார்.

Advertising
Advertising

Related Stories: