பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் ₹ 12.63 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

காஞ்சிபுரம், ஆக.20: கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில்  வாராந்திர  மக்கள் குறைகேட்பு  நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பொன்னையா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்றார். இதில்  முதியோர், விதவை, மாற்று திறனாளிகள், கல்வி உதவித் தொகை, வீட்டுமனை பட்டா, பசுமை வீடுகள், திருமண உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம் உப்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 310 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்களை, பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் வழங்கினார்.

மேலும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 15 பேருக்கு, ₹ 7.95 லட்சத்தில் இலவச 3 சக்கர ஸ்கூட்டர்கள், விபத்தில் மரணமடைந்த மாற்றுத்திறனாளி குடும்பத்துக்கு ₹1 இலட்சம், தேசிய அளவில் விளையாட்டு போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு வாரியம் சார்பில் 24 பேருக்கு ₹2.88 லட்சத்தில் உதவி தொகை ஆகியவை கலெக்டர் வழங்கினார்.மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர்  சுமதி, மாவட்ட ஆதிதிராடவிடர் நலத்துறை அலுவலர் தனலட்சுமி,  மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ஸ்ரீநாத், மாவட்ட விளையாட்டு நல அலுவலர் சுப்பிரமணியம், வருவாய் வட்டாட்சியர்கள் மற்றும்  அனைத்து துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: