துடியலூரில் சந்தையை ஆக்கிரமித்து திடக்கழிவு மேலாண்மை மையம்

பெ.நா.பாளையம்,ஆக.14:  துடியலூரில் வார சந்தையை ஆக்கிரமித்து திடக்கழிவு மேலாண்மை மையம் அமைக்க பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.துடியலூரில் பஸ் நிலையம் அருகே உள்ள வார சந்தை உள்ளது. இந்த சந்தை பொள்ளாச்சிக்கு அடுத்தபடியாக  பெரிய சந்தை ஆகும், இங்கு ஆடு, மாடு, கோழி, மீன், காய்கறிகள் உட்பட அனைத்து பொருட்களும் விவசாயிகள் கொண்டு விற்பனை செய்கின்றனர். விவசாயிகள் விளைபொருட்களை நேரடியாக கொண்டு வந்து குறைந்த விலையில் விற்பதால் பல பகுதிகளிலிருந்து பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் வந்து வாங்கி செல்கின்றனர். தற்போது இந்த சந்தையின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் திடக்கழிவு மேலாண்மை மையம் அமைக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. பழைமையான சந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் விவசாயிகள் கால்நடையாளர்கள் பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், இன்று (14ம் தேதி ) மாநகராட்சி ஆணையாளரை சந்தித்து மனு கொடுக்கவும் முடிவு செய்துள்ளனர். பணிகள் நிறுத்தப்படவில்லை என்றால் போராட்டங்கள் நடத்துவம் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: