ஜேகேகே நடராஜா கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு பயிற்சி

குமாரபாளையம், ஜூலை 23: குமாரபாளையம் ஜேகேகே நடராஜா கல்வி நிறுவனத்தில், ஐபிஎம் எனப்படும் இன்டர்நேசனல் பிசினஸ் மெஷின் நிறுவனத்தில், சிறப்பு பயிற்சி மையம் செயல்படுகிறது. இந்த மையத்தில் செயற்கை நுண்ணறிவு, மொபைல் அப்ளிகேசன், அப்ளிகேசன் டெவலப்மென்ட், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. கல்லூரியில் படிக்கும் மாணவ,  மாணவிகள் தங்களின் வேலைவாய்ப்புக்கான கூடுதல் தகுதியை தரும் இந்த பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து திறமைகளை வளர்த்துக்கொள்கின்றனர். இந்த பயிற்சியை முடித்த மாணவ, மாணவிகளுக்கு ஐபிஎம் நிறுவனம் சான்றிதழ்கள் வழங்குகிறது. இந்த ஆண்டு பயிற்சி முடித்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா, கல்லூரியில் நடைபெற்றது. மருந்தியல் கல்லூரி முதல்வர் சம்பத்குமார் வரவேற்றார். நடராஜா கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ஓம்சரவணா தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார். பொறியியல் கல்லூரி முதல்வர் தமிழரசு நன்றி கூறினார்.

Related Stories: