உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக அமைச்சரவை ஆலோசனை

புதுச்சேரி, ஜூலை 23:     புதுச்சேரியில் சிறப்பு சட்டமன்ற கூட்டம் நேற்று தொடங்கியது. கூட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே உள்ளாட்சி தேர்தல் நடத்துவது, தலைமை தேர்தல் ஆணையரை நியமிப்பது தொடர்பாக சட்டப்பேரவையில் பூகம்பம் வெடித்தது. முதல்வர், அமைச்சர்கள் தலைமையிலான மாநில அரசுக்கு தெரியாமல் கவர்னர் தரப்பில் இருந்து எப்படி இது தொடர்பாக விளம்பரம் செய்யலாம் என கேட்டு பெரிய விவாதமே நடந்தது. இது உரிமை மீறல் பிரச்னையாகவும் வெடித்திருக்கிறது. இதில் மேலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது. இந்நிலையில் நேற்று மாலை புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. முதல்வர் நாராயணசாமி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை செயலர் அஸ்வனி குமார், வளர்ச்சி ஆணையர் அன்பரசு மற்றும் அரசு செயலர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது, புதிய தலைமை தேர்தல் ஆணையரை நியமிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் இதுதொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக

தெரிகிறது.

Related Stories: