சூதாடிய 5 பேர் மீது வழக்கு

திருபுவனை, ஜூலை 18:  திருபுவனை அடுத்த ஆண்டியார்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் பணம் வைத்து சூதாடுவதாக திருபுவனை போலீசுக்கு தகவல் வந்தது. சப்-இன்ஸ்பெக்டர் பிரியா தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த 5 பேரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் வி.பபூதூர் இந்திராநகரை சேர்ந்த அன்பரசன் (42), ஆண்டியார்பாளையம் மணக்குப்பம் பாதையை சேர்ந்த பாலச்சந்திரன் (27), மாயக்கண்ணன் (34), உத்திரவேலு (40), விஜயன் (34) என தெரியவந்தது. இதையடுத்து 5 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சூதாட்டம் தொடர்பாக மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: