மாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சத்தியமங்கலம், ஜூலை 16: சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரி அருகே காந்திநகர் கிராமத்தில் பழமை வாய்ந்த மாகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் புனரமைக்கப்பட்டு திருப்பணிகள் நடந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 12ம் தேதி பவானி ஆற்றுக்கு சென்று புனிதநீர் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.

13ம் தேதி கணபதி ஹோமம் மற்றும் முதற்கால யாக பூஜை நடந்தது. நேற்று முன்தினம் இரண்டாம் கால யாக பூஜை  மற்றும் 3ம் கால யாகபூஜை, அன்று இரவு ராஜகணபதி மற்றும் மாகாளியம்மன் சிலை பிரதிஷ்டை செய்தல் நிகழ்ச்சி நடந்தது.
Advertising
Advertising

நேற்று காலை 4ம் கால யாக பூஜை, கும்பங்கள் ஆலயத்தை வலம் வருதல் நிகழ்ச்சி நடந்தது. காலை 9.15 மணிக்கு மாகாளியம்மன் கோயில் விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

இதைத்தொடர்ந்து ராஜகணபதி ஆலய கும்பாபிஷேகம் நடந்தது.

Related Stories: