ரோட்டில் குப்பை கொட்டினால் அபராதம்

திருப்பூர், ஜூலை 16:திருப்பூரில் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் ரோட்டில் குப்பைகளை கொட்டுவோர் மீது அபராதம் விதித்தும், போலீசாருக்கு தகவல் கொடுத்து சட்டபூர்வமான நடவடிக்கை எடுத்தல் போன்ற சட்டம் நடைமுறைக்கு வர உள்ளது.

இது குறித்து மாநகராட்சி நகர் நல அலுவலர் பூபதி கூறுகையில், ‘‘திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பல லட்சம் குடியிருப்புகள் உள்ளன. இங்கு மக்கள் வசிக்கும் பகுதியில் குப்பைகளை முறையாக அள்ளாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுகிறது. குப்பைகள் அள்ள பணியாளர்களை அதிகப்படுத்தி முறையாக குப்பைகளை அகற்றிய பின்பு, இந்த சட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய பின்னரே சட்டத்தை அமலாக்க உள்ளோம். மேலும் நீர்நிலைகளில் குப்பை கொட்டுவோர் குறித்த தகவல் அளிக்க மாநகராட்சி சார்பில் சமீபத்தில் வாட்ஸ் அப் எண் ஒன்று வெளியிட்டோம். அதில் குப்பைகள் கொட்டும் வாகனத்தின் எண்ணோடு வரும் தகவல்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,’’ என்றார்.

Advertising
Advertising

Related Stories: