அரசு பள்ளியை தத்தெடுக்க அனுமதிக்க வேண்டும் அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் கலெக்டரிடம் மனு

நெல்லை, ஜூலை 16:  ஜெகநாதபுரம் அரசு நடுநிலைப்பள்ளியை தத்தெடுக்க அனுமதி வழங்குமாறு நெல்லை கலெக்டரிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது. நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளர் பாப்புலர் முத்தையா தலைமையில் கட்சியினர் நேற்று கலெக்டரிடம் அளித்த மனு: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து பராமரிக்கும் பணிகளை  செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  அதற்கேற்ப நாங்குநேரி யூனியன் செண்பகராமநல்லூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஜெகநாதபுரம் நடுநிலைப்பள்ளியின் தரம் உயர்த்தவும், பள்ளியின் அடிப்படை வசதிகள் மற்றும் அனைத்து உதவிகளையும் என் சொந்த செலவில் செய்து தரும் வகையில் அப்பள்ளியை நான் தத்தெடுக்க தயாராக உள்ளேன். கலெக்டர் அதற்கு அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக மாநில இளைஞரணி முன்னாள் துணை செயலாளர் வை. சின்னத்துரை, பாளை பகுதி முன்னாள் செயலாளர் அசன்ஜாபர் அலி, தகவல் தொழில்நுட்ப பிரிவு எம்சி.ராஜன், மாநில பேச்சாளர் வாஸ்து தளவாய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: