குடிபோதையில் ஆற்றில் விழுந்து தொழிலாளி பலி

ஈரோடு, ஜூலை 12: ஈரோடு கருங்கல்பாளையம் வளையக்கார வீதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (45). இவர், ஈரோட்டில் உள்ள பாத்திரக்கடையில் வேலை செய்து செய்து வந்தார். இவருக்கு யமுனாதேவி (35) என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.  இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மனைவியிடம் தகராறு செய்து வீட்டை விட்டு சென்றார். அதன்பின் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் மகேந்திரனின் உடல் கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் மிதந்து வந்தது.

இதுதொடர்பாக கருங்கல்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், மனைவியிடம் தகராறு செய்துவிட்டு வீட்டை விட்டு சென்ற மகேந்திரன் குடிபோதையில் காவிரி ஆற்றில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது.
Advertising
Advertising

Related Stories: