மணல் கடத்திய இருவர் கைது

களக்காடு, ஜூலை 12:  களக்காடு அருகே உள்ள மங்கம்மாள் சாலை ஓடையில் சிலர் மணல் கடத்துவதாக களக்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து களக்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையிட்டனர். அப்போது பைக்கில் சாக்குமூடையில் மணல் கடத்திய பாளையங்கோட்டையை சேர்ந்த சுடலைக்கண்ணு (26), சிங்கிகுளத்தை சேர்ந்த இசக்கிப்பாண்டி (30) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய சிங்கிகுளத்தை சேர்ந்த மணி, சுந்தர், முத்துபாலன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: