தனியார் கம்பெனி ஊழியரிடம் செல்போன் பறிப்பு

வில்லியனூர், ஜூலை 12:வில்லியனூர் அடுத்த நத்தமேடு பிள்ளையார் கோயில் தெருவை ேசர்ந்தவர் கார்த்திகேயன் (27), தனியார் கம்பெனி ஊழியர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பணிக்கு சென்ற கார்த்திகேயன், கம்பெனி பேருந்தில் வந்து இரவு 11.30 மணியளவில் ஏம்பலத்தில் இறங்கியுள்ளார். பின்னர் அங்கிருந்து நத்தமேடு நோக்கி நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக ஒரே பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள் கார்த்திகேயனை மிரட்டி அவர் வைத்திருந்த ஐபோனை பறித்து சென்றனர். இதன் மதிப்பு ரூ. 46 ஆயிரம் ஆகும்.   இதுகுறித்து கார்த்திகேயன் மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார். அதில், கோர்க்காடு பகுதியை சேர்ந்த குண்டால் ராஜேந்திரன் (25) உள்ளிட்ட 3 பேர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து குண்டால் ராஜேந்திரனை கைது செய்த போலீசார் மற்ற 2 பேரையும் தேடி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: