உண்டியல் காணிக்கை எண்ணும் பணி பாஜ பிரமுகர் நடத்தி வரும் தனியார் பள்ளியில் மின்சாரம் துண்டிப்பு மாணவர்களுடன் சாலை மறியல்

ஒரத்தநாடு, ஜூலை 12: பிஜேபி பிரமுகர் நடத்தி வரும் தனியார் பள்ளியில் மின் இணைப்பு துண்டித்ததை கண்டித்து மாணவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.ஒரத்தநாடு அருகே பாளாம்புத்தூரில் தனியார் பள்ளி இயங்கி வருகிது. இது ஒரத்தநாடு ஒன்றிய பாஜ தலைவர் மாதவனுக்கு சொந்தமானது. இந்நிலையில் நேற்று காலை தஞ்சை - பட்டுக்கோட்டை மெயின்ரோட்டில் தனியார் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.ஒரத்தநாடு டிஎஸ்பி காமராஜ் தலைமையில் போலீசார் வந்து பள்ளி தாளாளரும், ஒன்றிய பாஜ தலைவருமான மாதவனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இதுகுறித்து மாதவன் கூறும்போது, மின்கட்டண வர்த்தக அட்டவணைப்படி இதுவரை மின்வாரியம் கட்டணத்தை வசூல் செய்து வந்தது. இந்த கட்டண முறையை இயல்பான முறையில் மாற்றி தருமாறு மின்வாரியத்திடம் முறையிட்டேன். ஆனால் மின்வாரியம் மாற்றி தரவில்லை. இதனால் மின்கட்டணம் செலுத்த முடியவில்லை. இந்நிலையில் நேற்று பள்ளியின் மின்சாரத்தை மின்வாரியம் துண்டித்துவிட்டது. இதனால் மின்வாரியத்தை கண்டித்து மாணவர்களுடன் மறியலில் ஈடுபட்டேன் என்றார்.இதுகுறித்து ஒரத்தநாடு மின்வாரிய செயற்பொறியாளர் விமலாவிடம் கேட்டபோது, தனியார் பள்ளிக்கு கட்டணம் கட்டாமல் இதுவரை ரூ.1.12 லட்சத்தை மின்வாரியத்திற்கு செலுத்தாமல் உள்ளார். பலமுறை மின்வாரிய ஊழியர்கள், மாதவனிடம் தெரிவித்தும் செலுத்தவில்லை. தமிழக அரசுக்கு செலுத்த வேண்டிய மின்கட்டணத்தை செலுத்தாமல் முறைகேடாக பள்ளி தாளாளர் நடந்துள்ளார் என்றார்.

Related Stories: