ரெப்கோ ஹோம் பைனான்ஸ் கிளையில் வீட்டுவசதி கடன் முகாம்

உடுமலை, ஜூலை 11:ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் சார்பில் வீட்டு வசதி கடன் முகாம் நடக்கிறது. உடுமலைப்பேட்டை, பழனி மெயின் ரோடு, சுபிக்ஷா காம்ப்ளக்ஸில் உள்ள அந்நிறுவன கிளையில் வரும் 12ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறுகிறது. இதில் வீட்டுமனை வாங்க, வீடுகட்ட மற்றும் அடுக்குமாடி கட்டிடம் வாங்க, வீடு பழுது பார்க்க, விஸ்தரிக்க, நிலுவையில் உள்ள அதிக வட்டி வீட்டு வசதி கடனை மாற்றி கூடுதல் தொகையை பெறுவதற்கும் கடன் வசதி அளிக்கப்படுகிறது. வட்டி விகிதம் 9.25 சதவீதம் முதலும் சிறப்பு சலுகையாக செயலாக்க கட்டணத்தில் 0.25 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இம்முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் வருமான சான்றிதழ் மற்றும் கடன் வாங்க இருக்கும் சொத்து விபரங்களுடன் நேரில் வருமாறு நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Advertising
Advertising

Related Stories: