மாணவர்களுக்கு கற்றல் முகாம்

காங்கயம்,ஜூலை11:காங்கயம் ஒன்றியம் நத்தக்காடையூரில் அரசு பள்ளி மாணவர்கள் களப்பணயம் மூலம் கற்றல் முகாம் நடைபெற்றது. காங்கயம் ஒன்றியம் நத்தக்காடையூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மற்றும் குருக்கள்பாளையம் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று களப்பயணமாக பழையகோட்டை சிவ்பார்வதி மன்றாடியார் செவிலியர் பயிற்சி கல்லூரிக்குச் சென்றனர். அங்கு மனித உடல் உள் உறுப்புகளான மூளை, இதயம், நுரையீரல், கல்லீரல், மனித எலும்பு அமைப்புகள், பற்கள் போன்றவற்றின் மாதிரிகளைக் காட்டி மாணவர்களுக்குத் தேவையான விளக்கத்தை கல்லூரி விரிவுரையாளர்கள் தெரிவித்தனர்.

 இதில் மருத்துவமனை அமைப்பு மாதிரிகள், குழந்தை கருவில் வளர்ச்சி முறை போன்றவற்றை மாணவர்கள் கண்டு விளக்கம் கேட்டறிந்தனர். மேலும் குறும்படம் மூலம் திரையிட்டு விளக்கினர்கள்.  பாரம்பரிய காங்கயம் காளைகளையும் மாணவர்கள் பார்வையிட்டனர். களப்பயண நிகழ்வுகளை பள்ளி ஆசிரியர்கள் நவனிகலா,விஜய்அமல்ராஜ், மணிகண்டன், வினோதினி ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: