8ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுச்சேரி, ஜூன் 27:    புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் குப்புசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள தேசிய ராணுவ கல்லூரியில் 8ம் வகுப்பில் சேர்வதற்கான விண்ணப்பத்தை (ஆண்கள் மட்டும்) செப்டம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 1.7.2020 அன்று 11 1/2 வயதுக்கு குறையாமலும், 13 வயதுக்கு பூர்த்தியாகாமலும் இருக்க வேண்டும். மாணவர்கள் 1.7.2020ல் இக்கல்லூரியில் சேரும் பொழுது 7ம் வகுப்பு பயில்பவராக அல்லது தேர்ச்சி பெற்றவராகவோ இருக்க வேண்டும். வருகிற டிசம்பர் 1ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை ஆங்கில தேர்வும், அன்று பிற்பகல் 2 மணி முதல் 3.30 மணி வரை கணித தேர்வும் நடைபெறும். டிசம்பர் 2ம் தேதி காலை 10 மணி முதல் 11 மணி வரை பொது அறிவு தேர்வு நடைபெறும். புதுச்சேரி மாணவர்களுக்கு எழுத்து தேர்வு நடைபெறும் தேர்வு மையம் குறித்த தகவல் இணை இயக்குநர் அலுவலக தேர்வு பிரிவால் அஞ்சல் வழி மூலம் அறிவிக்கப்படும்.

 விண்ணப்ப படிவத்தை பதிவு அஞ்சல், விரைவு அஞ்சல் மூலம் பெற, தெளிவான அஞ்சல் குறியீட்டு எண் உள்ள விலாசம் மற்றும் தொடர்பு எண் ஆகியவற்றுடன் கூடிய கோரிக்கை மனுவுடன், பொதுப்பிரிவினர் ரூ.500க்கும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் அதற்குண்டான சாதி சான்றிதழுடன் ரூ.555க்கு `THE COMMANDANT, RASHTRIYA INDIAN MILITY COLLEGE, DEHRADUN, DRAWEE BRANCH, STATE BANK OF INDIA, TEL BHAVAN, DEHRADUN, (BANK CODE - 01576), UTTARAKHAND’ என்ற கிளையில் மாற்றத்தக்க வரைவோலை எடுத்து `THE COMMANDANT, RASHTRIYA INDIAN MILITY COLLEGE, DEHRADUN CANTONMENT, UTTARANCHL - 248003 என்ற முகவரிக்கு அனுப்ப ேவண்டும்.  அல்லது www.rimc.gov.in என்ற வலைதளத்தின் மூலமாக பொதுப்பிரிவினர் ரூ.600ம், அட்டவணை இனத்தவர், பழங்குடியினர் ரூ.555ம் செலுத்தினால் விண்ணப்ப படிவம் தங்கள் முகவரிக்கு விரைவு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை, இணை இயக்குநர், 2ம் தளம், அ - அடுக்ககம், பெருந்தலைவர் காமாராஜர் நூற்றாண்டு கல்வி வளாகம், அண்ணா நகர், புதுச்சேரி - 605 005 என்ற முகவரியில்  செப்டம்பர் 30ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். இவ்வாறு அவர்

கூறியுள்ளார்.

Related Stories: