மாங்காய் திருடியதை கண்டித்ததால் பெண்ணை கொலை செய்த கணவனின் தம்பி கைது

கும்பகோணம், ஜூன் 27: கும்பகோணம் அருகே மாங்காய் திருடியை கண்டித்ததால் பெண்ணை கொலை செய்த கணவனின் தம்பி கைது செய்யப்பட்டார். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த மேலகொற்கையை சேர்ந்தவர் பாண்டியன் (50). இவரது மனைவி வசந்தி (35). இவர்களுக்கு மகன் சந்தோஷ் (18), மகள் சந்தியா (14) உள்ளனர். கோவையில் உள்ள ஓட்டலில் பாண்டியன் வேலை பார்க்கிறார். கோவையில் உள்ள கம்பெனியில் சந்தோஷ் பணியாற்றி வருகிறார். மேலகொற்கையில் சந்தியா 9ம் வகுப்பு படிக்கிறார்.கடந்த 17ம் தேதி பள்ளிக்கு சென்ற சந்தியா, அருகில் உள்ள தாத்தா வீட்டுக்கு சென்றார். இதனால் வீட்டில் வசந்தி மட்டும் இருந்தார். மறுநாள் வீட்டுக்கு சென்று சந்தியா பார்த்தார். அப்போது வீட்டின் பின்புறம் வசந்தி கொலை செய்யப்பட்டு கிடந்ததார்.இதுகுறித்து பட்டீஸ்வரம் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். மேலும் டிஎஸ்பி ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முருகவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று விஏஓ தனலட்சுமியிடம் பாண்டியன் வீட்டின் அருகில் வசிக்கும் அவரது தம்பியான மின்வாரிய ஒப்பந்த ஊழியர் பாலமுருகன் (35) சரணடைந்தார்.

இதையடுத்து பாலமுருகனை தாலுகா போலீசார் கைது செய்து விசாரித்தனர். அதில் பாண்டியனின் சித்தப்பா பாலகிருஷ்ணன், பக்கத்து வீட்டில் வசிக்கிறார். இவரது மகன் பாலமுருகனுக்கும், வசந்திக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

கடந்த 17ம் தேதி வசந்தி, வழுத்தூரில் நடந்த உறவினர் துக்க சம்பவத்துக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பின்புறத்தில் இருந்த மாமரத்தில் காய்த்திருந்த மாங்காய்களை காணாததால் பாலமுருகனை வசந்தி சத்தம் போட்டுள்ளார். மேலும் பாலமுருகனை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன், மின்மாற்றிக்கு பயன்படும் இரும்பு ராடால் வசந்தியை அடித்து கொலை செய்துள்ளார். மேலும் வசந்தியை கொலை செய்ததை திசை திருப்புவதற்காக அவரது வீட்டின் பீரோவை திறந்து 13 பவுன் நகைகளை திருடி சென்று மண்ணுக்குள் புதைத்து வைத்தது தெரியவந்தது. கொலை நடந்த அன்று முதல் வசந்தியின் கணவன் பாண்டியன், பாலமுருகன் வீட்டில் தங்கி உணவு சாப்பிட்டு வந்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், பாலமுருகனிடம் விசாரித்தபோது கொலை நடந்தன்று இரவு வசந்தி வீட்டில் சத்தம் கேட்டது. நான் செல்போன் டார்ச் அடித்து பார்த்தேன் என்று கூறினார். இதனால் பாலமுருகனின் செயல்களை ரகசியமாக கண்காணித்து வந்தோம் என்றனர்.

Related Stories: