காஞ்சிபுரம் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் முதலாண்டு வகுப்புகள் தொடக்க விழா

காஞ்சிபுரம், ஜூன் 27: காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி காஞ்சி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள்  தொடக்க விழா நேற்று நடந்தது.கல்லூரி நிறுவனர் பா.போஸ் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார். காஞ்சி கிருஷ்ணா கல்வி அறக்கட்டளை தாளாளர் அரங்கநாதன், தலைவர் மனோகரன், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர்  மோகனரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அறக்கட்டளையின் பொருளாளர் வி.மோகனரங்கன்  பேசுகையில், கல்லூரியின் 26 ஆண்டுகால வளர்ச்சி, சிறப்பம்சங்கள், பாடப்பிரிவுகள், மாணவர்களின் வேலைவாய்ப்புகள், பஸ் வசதி, கிராமப்புற ஏழை எளியோர் கல்வி பயில மிகவும்  குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி, பல்கலைக்கழகத் தேர்வில் ஆண்டுதோறும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற திறன்மிக்க பேராசிரியர்களை கொண்டு நடத்தப்படுவது, ஒழுக்கம், பண்பாடு, நன்நடத்தைகள் உள்பட  கல்லூரியின் பெருமைகளை எடுத்து கூறினார்.

பின்னர், பல்கலைக்கழகத் தேர்வில் துறைவாரியாக முதல் இடம் பெற்ற மாணவர்களுக்கு, பதக்கங்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இறுதியில் துணை முதல்வர் பிரகாஷ் நன்றி கூறினார்.

Related Stories: