தேனூர் கிராம இளைஞர்கள் கோரிக்கை

பெரம்பலூர்,ஜூன் 25:அதிகரிக்கும் நீர்நிலைஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும். என பெரம்பலூர் கலெக்டரிடம் தேனூர் கிராமஇளைஞர்கள் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் பெரம்பலூர் கலெக்டர்அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் க்கும்கூட்டத்தில் கலெக்டர் சாந்தாவிடம் நேரில்அளித்துள்ள புகார்மனுவில் தெரிவித்தி ருப்பதாவது :பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, துங்கபுரம் அருகேயுள்ள தேனூர் கிராமத்தில் ஆணைவாரி மற்றும் உப்போடை ஆகியவற்றின் ஓரங்களில் பட்டாநிலம் வைத்திருப்பவர்கள் தங்களது பட்டா நிலங்களுடன் ஓடையையும் சேர்த்து அதிகப்படி யானஅளவிற்கு ஆக்கிரமித்துள்ளனர். இந்தஆக்கிரப்புகள் ஒவ்வொரு ஆண்டும் தொட ர்ந்து அதிகரித்த படியேதான் உள்ளது. இதனால் ஏரிகளுக்கு வரும் நீர்வரத்து தடுக்கப் படுகிறது. நிலத்தடி நீரின்அளவும் மிகவும்கீழே சென்றுவிட்டது. பிற்காலங்களில் மிக அதிகளவு வறட்சிஉண்டாகி குடிநீருக்கே அவதிப்படும்நிலை வந்துவிடும் என்கிற அச் சம் தோன்றுகிறது. அதற்கு இப்போதே நடவடிக்கை எடுக்காவிட்டால், ஆக்கிரமிப்பாள ர்களின் எண்ணிக்கை அதிகமாகி முழுமையாக ஓடைகள் களவாடப்படும்.எனவே கலெக்டர் இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டுக் கொள்கிறோம் என அந்தப் புகார்மனுவையும், அதோடு ஆக் கிரமிப்பு தொடர்பான புகைப்பட ஆதாரங்களையும் இணைத்து கலெக்டர் சாந்தாவிடம் கொடுத்துள்ளனர்.

Related Stories: