ஓடை புறம்போக்கில் நடைபாலம் தீப்பெட்டி ஆலையை மக்கள் முற்றுகையிட்டு போராட்டம்

சிவகாசி: ஓடைபுறம்போக்கில் நடைபாலம் அமைத்த தீப்பெட்டி ஆலையை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகாசி-திருவில்லிபுத்தூர் சாலையில் சாட்சியாபுரம் ரயில்வே கேட் அருகில் தனியாருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை உள்ளது. இந்த தீப்பெட்டி ஆலை முன்பு ஏற்கனவே நடைபாலம் உள்ள நிலையில், தீப்பெட்டி ஆலை நிர்வாகம் புதிதாக நடைபாலம் அமைத்து வருகிறது. அனுமதியின்றி ஓடை புறம்போக்கில் நடைபாலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி குடியிருப்பு வாசிகள் தீப்பெட்டி ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இதையறிந்து டவுன் இன்ஸ்பெக்டர் சுபக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், தீப்பெட்டி ஆலை உரிமையாளர் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து திமுக நிர்வாகி தீலிபன் மஞ்சுநாத் கூறுகையில், ‘கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் மாவட்ட நிர்வாகம் மூலம் அகற்றப்பட்டது. தற்போது நீர்வழி புறம்போக்கு என்பதால் சுகாதார வளாகம் கட்டுவதற்கும் அனுமதி பெற முடியவில்லை. இந்நிலையில், மழைநீர் செல்ல முடியாத வகையில் ஓடை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தீப்பெட்டி ஆலை நிர்வாகம் சார்பில் நடைபாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அகற்ற அதிகாரிகள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்றார். …

The post ஓடை புறம்போக்கில் நடைபாலம் தீப்பெட்டி ஆலையை மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: