பாலாற்றை ஆக்கிரமித்துள்ள முட்புதர்களை அகற்ற கோரிக்கை

உடுமலை, ஜூன் 21:திருமூர்த்தி அணை நிரம்பும்போது, உபரிநீர் பாலாற்றில் திறந்து  விடப்படுகிறது. வல்லக்குண்டாபுரம், ஜே.என்.பாளையம், தீபாலபட்டி,  எரிசனம்பட்டி, தேவனூர்புதூர் வழியாக நல்லாற்றில் பாலாறு கலக்கிறது.  பாலாற்றில் பாயும் தண்ணீர் செக்டேம்களில் தேங்கி பாசனத்துக்கு  பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், பாலாற்றில் அதிகள அளவில்  கருவேலமரங்கள் வளர்ந்து காணப்படுகிறது. தண்ணீர் திறக்கும்போது, இந்த  ஆக்கிரமிப்புகளால் தண்ணீர் திசைமாறி சென்றுவிடும். எனவே, ஆற்றினை  ஆக்கிரமதித்துள்ள கருவேலம் மரங்களை வெட்டிஉடனடியாக அகற்ற வேண்டும் என  வருவாய்த்துறையினருக்கு பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: