தொட்டபெட்டா சாலையில் காட்டெருமை உலா

ஊட்டி, ஜூன் 21: தொட்டபெட்டா சாலையில் காட்டெருமை  உலாவுதால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.  ஊட்டி அருேகுயுள்ள தொட்டபெட்டா பகுதியில் சாலையில் நாள் தோறும் ஒரு காட்டெருமை வலம் வருகிறது. இந்நிலையில் நேற்று காட்டெருமை ஒன்று சாலையில் சுற்றித்திரிந்து உள்ளது. இதனை கண்ட சுற்றுலா பயணிகள் அச்சத்தில், வாகனங்களை தாறுமாறாக இயக்கியுள்ளனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் நீடிக்கிறது. மேலும், இந்த காட்டெருமையால் அடிக்கடி வாகன நெரிசலும் ஏற்படுகிறது. எனவே, வனத்துறையினர் காட்டெருமையை வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். குன்னூர்:  குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் காட்டெருமை புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

Related Stories: