பஸ் படிக்கட்டில் ஆபத்து பயணம் மாவட்டத்தில் பணி ஓய்வு பெற்ற 14 தலைமையாசிரியர்கள் பாராட்டி, கவுரவிப்பு

திருச்சி, ஜூன் 19: திருச்சி மாவட்டத்தில் பணி ஓய்வு பெற்ற, 14 தலைமை ஆசிரியர்கள் பாராட்டி, கவுரவிக்கப்பட்டனர்.தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் சார்பில், திருச்சி, முசிறி, லால்குடி கல்வி மாவட்டங்களில், சமீபத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா திருச்சியில் நடந்தது. திருச்சி மாவட்டத் தலைவர் பக்கிரிசாமி தலைமை வகித்தார். தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, தலைமை ஆசிரியர் சங்க முன்னாள் பொதுச்செயலர் அருள் சுந்தர்ராஜன், மாவட்ட கல்வி அலுவலர் சின்னராசு, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் பீட்டர்ராஜா, மாநில பொதுச்செயலர் ராஜூ, பொருளாளர் அன்பரசன், அமைப்புச் செயலர் இளங்கோ, மாவட்டச் செயலர் அழகிரிசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.திருச்சி மாவட்டத்தில் தலைமை ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்ற, பெருமாள், ஜெகதா, திலகவதி, சுப்பையா, சீனிவாசன், அங்கமுத்து, சாரதாமணி, விஜயரெங்கன், எஸ்தர், சகாய ரெஜினா, நிர்மலா, மணிமேகலை, புளோராமேரி, மரிய ஜோசப் ஆகிய 14 தலைமை ஆசிரியர்களுக்கும் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். அவர்களின் பணியை பாராட்டி நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertising
Advertising

Related Stories: