உடுமலை உழவர்சந்தையில் கூடுதல் கடைகள் அமைக்கு பணி துவக்கம்

உடுமலை, ஜூன் 19: உடுமலை கபூர்கான் வீதியில் உழவர்சந்தை செயல்பட்டு வருகிறது. சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் இங்கு தங்கள் விளைபொருட்களை கொண்டு வந்து, நேரடியாக விற்பனை செய்கின்றனர்.தினசரி இந்த உழவர்சந்தைக்கு 2500க்கும் மேற்பட்ட பொதுமக்களும், ஞாயிற்றுக்கிழமைகளில் 3500க்கும் மேற்பட்டோரும் வந்து குறைந்த விலையில் காய்கறி வாங்கி செல்கின்றனர். உழவர்சந்தையில் 52 ஸ்டால்கள் உள்ளன. ஆனால் 85 விவசாயிகள் காய்கறி கொண்டு வருகின்றனர். மீதமுள்ளவர்களுக்கு கடை இல்லாததால் காய்கறிகளை தரையில் வைத்து விவசாயிகள் விற்பனை செய்து வந்தனர். மேற்கூரை இல்லாததால் வெயிலிலும், மழையிலும் அவதிப்படுகின்றனர். இடநெருக்கடியும் ஏற்படுகிறது. இதனால் கூடுதல் ஷெட் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, வேளாண் வணிக துறை சார்பில் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதன்பேரில், அரசு புதிய ஷெட் அமைக்க ரூ.4.12 லட்சம் நிதி ஒதுக்கியது. தற்போது, புதிய ஷெட் அமைக்கும் பணி நடக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: