சொந்த ஊரில் வேலை வழங்க கோரிக்கை பத்தாம் வகுப்பு மாணவர் லிங்கராசனத்தில் சாதனை

விருதுநகர், ஜூன் 18:  விருதுநகரில் உள்ள நோபிள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படிப்பவர் மாணவர் ஷியாம் கணேஷ்(15). இவர் லிங்கராசனம் எனப்படும் கைகளை தரையில் ஊன்றி, கால்களை மேலே தூக்கி பாதம் மூலம் அம்பை சரியான இலக்கை நோக்கி எய்தி சாதனை படைத்துள்ளார். 14 மீட்டர் தூரத்தில் இருந்து ஒரு நிமிடத்தில் 5 முயற்சிகளில் 3 முறை இலக்கை நோக்கி எய்துள்ளார்.

லிங்கராசனத்தில் சீனாவை சேர்ந்த 25 வயது பெண்மணி 3.5 மீ தூரத்தில் இருந்து மூன்று முறை முயன்று, ஒரு முறை இலக்கில் எய்தது முந்தைய சாதனையாக இருந்தது. இதனை முறியடித்து 14 மீ தூரத்தில் இருந்து, மூன்று முறை அம்பை இலக்கில் எய்து புதிய சாதனையை ஷியாம் கணேஷ் படைத்துள்ளார். இச்சாதனையை நோபிள் உலக சாதனை நிறுவன இயக்குநர் டாக்டர் அரவிந்த் பதிவு செய்து சான்றிதழ் வழங்கி உள்ளார். மேலும், கின்னஸ் உலக சாதனைக்கு பரிந்துரை செய்வதாக தெரிவித்துள்ளார். லிங்கராசனத்தில் சாதனை படைத்த மாணவர் ஷியாம் கணேசனை, பள்ளி சேர்மன் டாக்டர் ஜெரால்டு ஞானரத்தினம், பள்ளிச் செயலர் டாக்டர் வெர்ஜின் இனிகோ, யோகா ஆசிரியர் ஜெயக்குமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். கைகளை தரையில் ஊன்றி கால்களால் அம்பு எய்தார்.

Related Stories: