அரசு, தனியார் நிறுவனங்களில் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து சிஐடியூ ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர். ஜூன் 14: அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தொழிற்சங்கம் அமைத்ததால் தொழிலாளர்கள் மீது பொய் வழக்கு மற்றும் கைது, பணிநீக்கம் என தொடரும் பழிவாங்கும் நடவடிக்கைகளை கண்டித்து தஞ்சை பனகல் கட்டிடம் முன் சிஐடியூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சிஐடியூ மாவட்ட துணை செயலாளர் அன்பு தலைமை வகித்தார்.ஆர்ப்பாட்டம் தொழிற்சங்கம் அமைத்ததற்காக தொழிலாளர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டும். டாஸ்மாக் நிறுவனத்தில் காலியாக உள்ள 500 இளநிலை உதவியாளர் இடத்துக்கு எழுத்துத்தேர்வை நடத்தி டாஸ்மாக் ஊழியர்களை பணி நியமனம் செய்து சுழற்சிமுறை பொது பணியிட மாறுதல் செய்ய வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகளுக்கு அங்கன்வாடி ஊழியர்களை ஆசிரியர்களாக அறிவிக்க வேண்டும்.ஆதார் இ-சேவை மைய ஊழியர்களுக்கு சட்டப்படியான ஊதியம் சட்ட சலுகைகளை வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கூட்டுறவு நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தமிழகத்தில் மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்களில் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் ஜெயபால் நன்றி கூறினார்.

Advertising
Advertising

Related Stories: