தஞ்சை பகுதி கடைகளில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 24 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

தஞ்சை, ஜூன் 13: தஞ்சை பகுதி கடைகளில் விற்பனைக்கா பதுக்கி வைப்பட்டிருந்த 24 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் கைப்பற்றப்பட்டு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.தஞ்சை மாவட்டத்தில் பிளாஸ்டிக் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பல இடங்களில் ஆங்காங்கு பிளாஸ்டிக் பயன்பாடு இருந்து வருவதாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் மூலம் 2 குழுக்கள் அமைக்கப்பட்டு அவ்வபோது அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள கடைகளில் 24 பேர் கொண்ட 2 குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 4 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டன. இதையடுத்து சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.இந்நிலையில் நேற்று தஞ்சை வடக்கு அலங்கத்தில் குடோன் ஒன்றியில் பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் தலைமையிலான குழுவினர் அந்த கிடங்கில் ஆய்வு செய்தனர். இதில் குறிப்பிட்ட மைக்ரான் கீழ் உள்ள 20 டன் பிளாஸ்டிக் பைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டன. இதையடுத்து குடோன் உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தஞ்சை மாநகரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: