பெரியநாகலூர் கிராமத்தில் மதிப்பீட்டாய்வு கூட்டம்

அரியலூர், ஜூன் 13: அரியலூர் அருகேயுள்ள பெரியநாகலூர் கிராமத்தில் வேளாண்துறை சார்பில் நீடித்த நிலையான மானாவாரி நில மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் விவசாயிகளை கொண்டு மக்கள் பங்கேற்பு மதிப்பீட்டாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.

  வேளாண் உதவி இயக்குநர் பூவலிங்கம் தலைமை வகித்து, கோடை உழவின் முக்கியத்துவம், மக்காச்சோளம் பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்து பேசினார். பின்னர் அவர் மானாவாரி நில விவசாயிகளுக்கு தொழில்நுட்ப கையேடுகளை வழங்கினார். வேளாண் தரக்கட்டுப்பாடு உதவி இயக்குநர் சுரேஷ், கீரிடு வேளாண் அறிவியல் மையம் வல்லுநர் திருமலைசாமி ஆகியோர் பங்கேற்று பேசினர்.  கூட்டத்தில் கோடை உழவு மானியமாக ஏக்கருக்கு ரூ.500 வீதம் பெற சிட்டா, ஆதார் கார்டு நகல், வங்கி கணக்கு எண் விபரம் போன்ற ஆவணங்களை வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. முடிவில் வேளாண் அலுவலர் சவிதா நன்றி கூறினார்.

Related Stories: