நாகை எம்எல்ஏ எச்சரிக்கை அம்ரூத் திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் விழா

காரைக்கால், ஜூன் 13: காரைக்கால் நகராட்சி அம்ரூத் திட்டத்தின் கீழ், பச்சூர் கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சித் துறையின் வழிகாட்டுதலின்படி, உலக சுற்றுச்சூழல் தின தொடர் கொண்டாட்டங்களின் ஒரு நிகழ்ச்சியாக, காரைக்கால் பச்சூர் கிராமம் திருவள்ளுவர் நகரில் அமைந்துள்ள புதிய குழந்தைகள் பூங்காவில், நகராட்சி நிர்வாகத்தினர், அம்ரூத் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழாவை நடத்தியது.

நிகழ்ச்சிக்கு, நகராட்சி செயற்பொறியாளர் மோகனதாஸ் தலைமையில், ஆணையர் சுபாஷ், துப்புரவு ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர். ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவன திட்ட அதிகாரி, மேலாளர்கள் மற்றும் பசுமை நண்பர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: