திருமானூரில் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரிப்பு பயிற்சி

அரியலூர், ஜூன் 12: அரியலூர் மாவட்டம் திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டமன்றத்தில் 36 ஊராட்சிகளை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ௯ட்டுறவு அங்காடி பணியாளர்களுக்கு 2019- 2020ம் ஆண்டுக்கான கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரிப்பது தொடர்பான பயிற்சி நேற்று முதல் மண்டல வாரியாக 3 நாட்கள் நடக்கிறது. திருமானூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த மண்டலம் 1க்கு உட்பட்ட பயிற்சியை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) நாராயணன் துவக்கி வைத்தார்.

மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர், தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தாமரைச்செல்வி முன்னிலை வகித்தனர். பயிற்சியை மாவட்ட அளவிலான பயிற்றுநர் தயாளன் நடத்தினார். இதில் கிராமப்புற வளர்ச்சியில் பல்வேறு துறைகளின் பங்கு, கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்தை நிலைத்த வளர்ச்சிக்கான இலக்குகளின் அடிப்படையில் தயாரித்தல், ஊராக வளர்ச்சி அமைப்புகள், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரிக்கும் முறை, ௯ட்டமைப்புகளின் பங்கு, திட்டம் தயாரிப்பதில் சுய உதவி குழுக்களின் பங்கு, கிராம வளர்ச்சி திட்ட படிவம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

Related Stories: