பொருள் சேதத்தை மீட்டெடுக்கலாம் தீ விபத்துக்களால் ஏற்படும் உயிர் சேதத்தை மீட்டெடுக்க முடியாது மாவட்ட தீயணைப்பு அலுவலர் பேச்சு

ஆரணி, ஜூன் 12: ஆரணியில் நடந்த தீ தடுப்பு விழிப்புணர்வு முகாமில் தீயினால் ஏற்படும் பொருள் சேதத்தை மீட்டெடுக்க முடியும், உயிர் சேதத்தை மீட்டெடுக்க முடியாது என மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் பேசினார். ஆரணியில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நேற்று ஆரணி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் தொடங்கி வைத்து பேசியதாவது:

இனிவரும் காலங்களில் மழை, கடும் வெயில் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளால் தீ வீபத்து ஏற்படாதவாறு பார்த்து கொள்ள தீ தடுப்பு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும். மேலும், தீ விபத்துக்களால் ஏற்படும் பொருள் சேதத்தை மீட்டெடுக்கலாம், ஆனால் உயிர் சேதத்தை மீட்டெடுக்க முடியாது. அதனால் தீ விபத்தை தடுக்கவும், தீ விபத்து ஏற்படாமல் பாதுகாத்து கொள்ள தீ தடுப்பு குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்வது அவசியம் இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, தீ தடுப்பு குறித்து செயல் விளக்கத்துடன் தீயணைப்பு வீரர்கள் செய்து காட்டினர். இதில், ஆரணி தீயணைப்பு துறை நிலை அலுவலர் விஜயகுமார், தீயணைப்பு அலுவலர் கோபாலகிருஷ்ணன், வியாபாரிகள், பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: