புதுச்சேரி 100 அடி ரோட்டில் எம்எல்ஏ தலைமையில் ெபாதுமக்கள் திடீர் மறியல்

புதுச்சேரி, ஜூன் 11:  புதுவை 100 அடி ரோட்டில் இருந்து ஜெயமூர்த்தி ராஜா நகர் பகுதிக்கு செல்லும் வழியை அடைத்து போடப்பட்ட பேரிகார்டுகளை அகற்றக்கோரி எம்எல்ஏ தலைமையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் கிடைத்து வந்த முதலியார்பேட்டை போலீசார், தடுப்பு பேரிகார்டுகளை உடனடியாக அகற்றினர். புதுவையில் 100 அடி சாலை மரப்பாலம் முதல் சிவாஜி சிலை வரையிலான பகுதிகளில் தேவையற்ற இடங்களில் குறுக்கு சாலைகளை போக்குவரத்து காவல்துறை பேரிகார்டுகளை அமைத்து அடைத்தது. குறிப்பாக விபத்துகள் அதிகளவில் நடந்த குறுக்கு சாலைகள் மட்டும் அடைக்கப்பட்டன. இதில் மரப்பாலம் பெட்ரோல் பங்க் மற்றும் காராமணிக்குப்பம் குறுக்கு சாலை இணைப்பு சந்திப்பில் போடப்பட்டிருந்த பேரிகார்டுகளை சிலர் தனது வியாபார நோக்கத்திற்காக அகற்றி விட்டதால் மீண்டும் அங்கு போக்குவரத்து தொடங்கி விபத்து ஏற்படும் சூழல் உருவானது. இதுபற்றி போக்குவரத்து காவலர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர்கள் அவற்றை முழுமையாக மூடாமல், கூடுதலாக 100 அடி சாலையில் இருந்து ஜெயமூர்த்தி ராஜா நகர், இன்ஜினீயர்ஸ் காலனி, ஜெயம் நகர், அண்ணாமலையார் நகர், திருப்பூர் குமரன் நகர், தேவகி நகர், வேல்ராம்பேட் உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் வழியை அடைத்து பேரி கார்டுகளை அமைத்தனர். இதனால் அப்பகுதி ெசல்லும் ெபாதுமக்கள் ெசவன்த்ேட பள்ளி எதிரே உள்ள குறுக்கு சாலை வழியை பயன்படுத்தி அப்பகுதிக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் தொகுதி எம்எல்ஏ பாஸ்கரிடம் முறையிட்டனர்.

Advertising
Advertising

இதையடுத்து அவர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு அதை அகற்ற வலியுறுத்தினார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், அப்பகுதி மக்கள் தங்களது குழந்தைகளை வெகுதூரத்துக்கு சுற்றி அழைத்துச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டதால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இதையடுத்து அப்பகுதி குடியிருப்போர் நலச்சங்கத்தினர், பெண்கள், இளைஞர்கள் என நூற்றுக்கணக்கானோர் 100 அடி சாலையில் பாஸ்கர் எம்எல்ஏ தலைமையில் திரண்டு திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் 100 அடி சாலையில் வாகனங்கள் எதுவும் செல்ல முடியாமல் மேம்பாலம் வரை அணிவகுத்து நின்றது. அந்த பகுதியில் ஒருமணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்படவே, தகவல் கிடைத்து வந்த முதலியார்பேட்டை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ேதவைப்படும் இடத்தில் பேரிகார்டுகளை அமைத்து விபத்து

உயிரிழப்புகளை தடுப்பதை விட்டுவிட்டு, மக்களை வதைக்கும் செயலில் போலீசார் செயல்படுவது ஏன்? என கேள்வி எழுப்பியதோடு, இதுதொடர்பாக ஏற்கனவே 3 முறை சம்பந்தப்பட்ட டிராபிக் எஸ்பியிடம் பேசியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என முறையிட்ட எம்எல்ஏ, பேரிகார்டுகளை அகற்றும்வரை மறியலை கைவிட மாட்டோம் என மறுத்துவிட்டார். இதையடுத்து உயர்அதிகாரிகளிடம் பேசி அனுமதிபெற்ற முதலியார்பேட்டை போலீசார், உடனடியாக அங்கிருந்த 3 பேரி கார்டுகளையும் அப்புறப்படுத்தி மீண்டும் அப்பகுதியில் வழியை ஏற்படுத்திக் கொடுத்தனர். அதன்பிறகே எம்எல்ஏவும், பொதுமக்களும் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சிறிதுநேரம் அங்கு பரபரப்பு நிலவியது.

Related Stories: