திருமணம் நிச்சயிக்கப்பட்ட சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை

பாகூர், ஜூன் 11:  பாகூரில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட சட்டக்கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.பாகூர் ஏரிக்கரை வீதியை சேர்ந்தவர் குலசேகரன் மனைவி தேவி. இவரது மகள் யுவ (21). சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும் உறவினர் ஒருவருக்கும் திருமணம் செய்ய சமீபத்தில் நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். இந்நிலையில் நிச்சயம் செய்த மாப்பிள்ளையுடன் யுவ அடிக்கடி செல்போனில் பேசியுள்ளார். இதை அவரது தாயார் கண்டித்ததால் மனமுடைந்த யுவஸ்ரீ வீட்டின் அறையில் இருந்த சீலிங் பேனில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டு தொங்கினார். இதைக்கண்ட அவரது தாயார் மற்றும் உறவினர்கள் யுவயை மீட்டு பாகூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் யுவ ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பாகூர் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சவுரிமற்றும் போலீசார் சடலத்ைத கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக யுவதாயார் தேவி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் நிச்சயிக்கப்பட்ட சட்டக் கல்லூரி மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாகூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertising
Advertising

Related Stories: