நிதி பிரச்னையை தீர்க்க புதுச்சேரிக்கு கடன் தள்ளுபடி

புதுச்சேரி, ஜூன் 11: புதுவைக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என புதிய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அமித்ஷாவிடம் முதல்வர் நாராயணசாமி நேற்று நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை புதுவை முதல்வர் நாராயணசாமி நேற்று அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து பேசினார். இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: புதிய உள்துறை அமைச்சராக பதவியேற்று உள்ள அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். புதுச்சேரி மாநிலத்திற்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். புதுச்சேரியில் நீண்ட காலமாக நிலவும் நிதி பிரச்னையை உள்துறை அமைச்சரிடம் தெரிவித்தேன். அதேபோல நீண்டகாலமாக புதுச்சேரி கடனில் சிக்கியுள்ளது குறித்தும் விளக்கி, கடன் தள்ளுபடி செய்யவும் வலியுறுத்தினேன்.  பதினெட்டாவது நிதிக் கமிஷன் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அதேபோல் டெல்லியில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பென்ஷன் தொகை வழங்குவது போன்று புதுச்சேரிக்கும் வழங்க வேண்டும். ஏழாவது சம்பள கமிஷன் தற்பொழுது புதுச்சேரியில் நடைமுறையில் உள்ளது. ஆனால், இதற்கு மூன்று ஆண்டுகளாக நிதி வழங்கப்படாமல் இருக்கிறது. மாநில அரசின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு உடனடியாக நிலுவை நிதியை வழங்க வேண்டும். இதை தவிர புதுச்சேரி எல்லைக்குட்பட்டு கடன் வாங்க உரிய அதிகாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன். அனைத்து கோரிக்கையையும் கேட்ட அவர், பரிசீலனை செய்வதாக உறுதியளித்துள்ளார். புதுவை ஆளுநர் கிரண்பேடியை மாற்றுவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வலியுறுத்த உள்ளேன். இது தொடர்பாக அவரது அலுவலகத்தில் நேரம் கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertising
Advertising

Related Stories: