மாடிக்கு செல்ல முடியாமல் வாசகர்கள் அவதி வத்திராயிருப்பு ஜமாபந்தியில் 121 பேருக்கு பட்டா மாறுதல் ஆணை

வத்திராயிருப்பு, ஜூன் 5: வத்திராயிருப்பு தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில், பல்வேறு பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. வத்திராயிருப்பு குறுவட்டத்தில் உள்ள கான்சாபுரம், எஸ்.கொடிக்குளம், வத்திராயிருப்பு, வ.புதுப்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களுக்கும், கோட்டையூர் குறுவட்டத்தில் உள்ள மகாராஜபுரம், தம்பிபட்டி, கோட்டையூர் உள்ளிட்ட பல கிராமங்களுக்கும், வத்திராயிருப்பு தாலுகா அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு சிவகாசி ஆர்டிஓ தினகரன் தலைமை வகித்தார்.

இதில், 121 பேருக்கு பட்டா மாறுதல் ஆணையும், 71 மலைவாழ் மக்களுக்கு சாதிச்சான்றிதழும், ஒருவருக்கு ஆதரவற்றோர் விதவைச் சான்றிதழும் ஆர்டிஓ வழங்கினார். மேலும், வருவாய் கிராமங்களில் கணக்கு குறித்து ஆய்வு நடைபெற்றது. மேலும், பட்டா மாறுதல், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனை, பிறப்பு இறப்பு சான்றிதழ் கோரி வந்த 104 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆர்டிஓ உத்தரவிட்டார். இதில், தாசில்தார் சரஸ்வதி, தலைமையிடத்து துணை தாசில்தார் சசிகலா, மண்டல துணை தாசில்தார் சுப்புலட்சுமி, வருவாய் ஆய்வாளர்கள் சசிகுமார், கற்பகலட்சுமி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். கோட்டையூர் மற்றும் நத்தம்பட்டி குறுவட்டத்தை சேர்ந்த கிராமங்களுக்கு வத்திராயிருப்பு தாலுகா அலுவலகத்தில் நாளை ஜமாபந்தி நடக்க உள்ளது.

Related Stories: