தேனி கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா? தேனி வெங்கலா நகரில் திட்டச்சாலையை திறக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

தேனி, ஜூன் 4: தேனி வெங்கலா நகரில் திட்டச்சாலையை திறக்க வேண்டும் என கலெக்டரிடம் வெங்கலாநகர் பொதுமக்கள் இந்து எழுச்சி முன்னணி அமைப்பினருடன் சேர்ந்து வந்து கோரிக்கை மனு அளித்தனர்.  தேனி அல்லிநகரம் 12வது வார்டான வெங்கலா கோயில் மேற்குபகுதியான வெங்கலாநகரில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடியிருப்போருக்கான நடைபாதை முறைப்படுத்தப்படவில்லை. எனவே, நகர்பகுதிக்கு வரும் இப்பகுதி மக்கள் அடுத்தவர் இடங்களுக்குள் சென்று வந்தனர். தற்போது, இப்பகுதி நில உரிமையாளர்கள் அவரவர் நிலத்தை சுற்றி சுற்றுச்சுவர் மற்றும் வேலி அமைத்துவிட்டனர். இதனால் இப்பகுதியில் குடியிருப்போருக்கு பாதை இல்லாத நிலை உள்ளது. இதனால் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது.  

இதனையடுத்து, வெங்கலா கோயில் தெருவில் குடியிருப்போர் இந்து எழுச்சி முன்னணி அமைப்பின் அன்னையர் அணி அமைப்பாளர் தனலட்சுமி தலைமையில் ஏராளமானோர் கலெக்டர் அலுவலகம் வந்து கோரிக்கை மனு அளித்தனர். இம்மனுவில், வெங்கலா கோயில் தெருவில் குடியிருப்போருக்கான நடைபாதைக்காக விரைவில் இப்பகுதியில் நகராட்சியால் திட்டமிடப்பட்டுள்ள திட்டச்சாலையை விரைந்து நடைமுறைக்கு கொண்டு வந்து தார்ச்சாலை அமைக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: