அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வலியுறுத்தி சைக்கிளில் விழிப்புணர்வு பிரசாரம்

சிவகாசி, மே 30:  அரசுப் பள்ளிகளை பாதுகாக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக்கோரியும், கட்டாயக் கல்விச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில்

25 சதம் ஏழை, எளிய மாணவர்களுக்கு, இடஒதுக்கீடு வழங்கக்கோரியும்,  இந்திய மாணவர் சங்கம் சார்பில் கடந்த 25ம் தேதி கன்னியாகுமரி, கோவை, சென்னை, கடலூர் ஆகிய 4 நகர்களிலிருந்து சைக்கிள் பிரசாரம் தொடங்கினர். 1500 கி.மீ தூரம் பயணம் செய்யும் இப்பிரசாரம் நாளை முடிவடைகிறது.

இதனடிப்படையில் தொடங்கிய பிரசாரம், சாத்தூர் வழியாக சிவகாசி பஸ்நிலையம் வந்தது.

இவர்களுக்கு சிவகாசியில் வாலிபர் சங்கம், ஆசிரியர் சங்கம், தொழிற்சங்கம், தமுஎகச சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு விக்டர் தலைமை வகித்தார். தேவா, வைரமுத்து, முத்தையா, ஷெரீப், முத்துராஜ் ஆகியோர் வரவேற்று பேசினர். சாத்தூர்: சாத்தூரில் முக்குராந்தலுக்கு வந்த இந்திய மாணவர் சங்க சைக்கிள் பிரசாரத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த சைக்கிள் பிரசாரம் நாளை திருச்சியில் முடிவடையும்.

Related Stories: